திமுகவை நான் ஆதரிப்பேன்.. நாம் தமிழர் சீமான் அறிவிப்பு..!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (13:27 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை ஆதரிப்பேன் என திடீர் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  செய்தியாளர்களிடம் பேசியபோது ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவர் எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கூறினார் 
 
மேலும் பாஜகவை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது  ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை நான் எதிர்த்து போட்டியிடுவேன். ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் நான் வாபஸ் வாங்கி விடுவேன் என்றும் திமுகவை ஆதரிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய சீமான் தற்போது திடீரென திமுக வேட்பாளருக்கு ஆதரவு என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்