இந்நிலையில் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் ஒன்று திரண்ட விசிகவினர், காயத்ரி ரகுராமின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும் காயத்ரி ரகுராமை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த செய்தியினை அறிந்த காவல் துறையினர் உடனடியாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அமைதியாக கலைந்து போக வலியுறுத்தினர். அதன் பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.