”தீய சக்திகளின் உருவம் தான் திருமாவளவன்”.. ஹெச்.ராஜா ஆவேசம்

Arun Prasath

செவ்வாய், 19 நவம்பர் 2019 (11:37 IST)
இந்து கோயில்களை குறித்து இழிவாக பேசிய திருமாவளவன். ஒரு தீய சக்திகளின் உருவம் என ஹெச்,ராஜா கூறியுள்ளார்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன், ஹிந்து மத கோயில்களின் சிலைகளை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் திருமாவளவனின் சர்ச்சையான கருத்திற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தனது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹிந்துத்துவா, பாஜக ஆகியவை குறித்து பல மேடைகளில் பல் வருடங்களாக கடுமையாக விமர்சித்து வருபவர் தொல்.திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்