கரையை கடக்கும் வர்தா புயல் - சென்னையில் கன மழை பெய்யும்

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (10:44 IST)
வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள வர்தா புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
சென்னையிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் மசூலிப்படனம் அருகில் வர்தா புயல் நிலைகொண்டுள்ளது.  இந்த புயல் தெற்கு ஆந்திராவில் நாளை (12ம் தேதி) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அப்படி அந்த புயல் கரையைக் கடக்கும் போது, 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும், இதனால் சென்னை மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
எனவே நாளை கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்