கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், தற்போது கோயம்பேடு சந்தையில் 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளி விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநில, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக தக்காளி விலை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் கோயம்பேடு சந்தைக்கு மூட்டை மூட்டையாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், 4 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் ஒரு கிலோ தக்காளியை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல் வெங்காயம் விலையும் ஓரளவு குறைந்த நிலையில், வெங்காயம் தற்போது ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், மற்ற காய்கறிகளின் விலை அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமையலுக்கு முக்கியமான தேவையான தக்காளி மற்றும் வெங்காயம் இரண்டின் விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.