யாரும் போக முடியாத கடைசி நாளில் அத்திவரதரை தரிசித்த வரதராஜர்

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (20:26 IST)
அத்திவரதர் வைபவத்தின் 48ம் நாளான இன்று ஆகம விதிகளின்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டன.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் முடிவடைந்தது. இன்று ஆகமவிதிகளின் படி பூஜைகள் நடக்க இருந்ததால் நேற்றோடு முடியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காஞ்சிபுரமே பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. இன்று அதிகாலை 3 மணிவரை பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.

கடைசி நாளான இன்று பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட அத்திவரதரை கோவில் மூலவர் வரதராஜ பெருமாள் சந்திக்கும் வைபவம் இன்று மாலை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு அத்திவரதர் சயனக்கோலத்தில் குளத்திற்குள் இறங்க உள்ளார். இதனால் அத்திவரதருக்கு தைல காப்பு பூசும் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்