அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே ஆளாளுக்கு வெளியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல்!

வியாழன், 21 மார்ச் 2019 (08:15 IST)
அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமர், ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என தமிழிசை அறிவித்தார். ஆனால் நேற்று அக்கட்சியின் தலைமை வேட்பாளர் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் பாஜக பிரமுகர்கள் சிலர் வேட்பாளர் பட்டியலை கசியவிட்டனர்
 
இதன்படி தூத்துக்குடியில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா மற்றும் ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக பிரமுகருமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில் 'கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்  திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்... என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஒரு கட்சி அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரே ஆளாளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவு என்றும் பதிவு செய்து வருவதை பாஜக தொண்டர்கள் அதிருப்தியுடன் பார்த்து வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமற்று பரவி வருவது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் அதிருப்தி தெரிவிதுள்ளதாக தெரிகிறது

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற உழைப்போம்...
Wishes 4 @CPRBJP pic.twitter.com/qFKjC6RQFU

— Chowkidar Vanathi Srinivasan (@VanathiBJP) March 20, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்