இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து வளர்மதி விடுவிப்பு: அதிமுக அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (19:00 IST)
அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வளர்மதி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அதேபோல் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த வைகைச்செல்வன் அவர்களும் விடுவிக்கப்படுவதாகவும் அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
அதற்கு பதிலாக வளர்மதி அவர்களுக்கு செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பும் வைகைச்செல்வன் செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மரகதம் குமரவேல் என்பவருக்கு செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு மகளிரணி செயலாளர் பொறுப்பும் வெங்கட்ராமன் மற்றும் ஆனந்தராஜா ஆகிய இருவரும் வர்த்தக அணி செயலாளர்கள் பதவியிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்