தமிழ் வானொலியில் இந்தி மொழியா? வைரமுத்து ஆவேசம்..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (10:06 IST)
தமிழ் வானொலியில் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும்  ஹிந்தியை குறைக்காவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் வானொலி நிலைய வாசலில் களமிறங்கி போராடுவோம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அகில இந்திய வானொலியின்
தமிழ் நிலையங்கள்
பல கலைஞர்கள்
தமிழ் விளைத்த கழனிகளாகும்;
கலைக்கும் அறிவுக்குமான
ஒலி நூலகங்களாகும்
 
அங்கே தமிழ் மொழி
நிகழ்ச்சிகள் குறைந்து
இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது
மீன்கள் துள்ளிய குளத்தில்
பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்
 
கண்டிக்கிறோம்
 
இந்தி அகலாவிடில்
அல்லது குறையாவிடில்
தமிழ் உணர்வாளர்கள்
வானொலி வாசலில்
களமிறங்குவோம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்