முதல்வர், அமைச்சர்கள் இல்லாத கவர்னரின் தேநீர் விருந்து: யார் யார் கலந்து கொண்டார்கள்?

வியாழன், 14 ஏப்ரல் 2022 (18:02 IST)
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேனீர் விருந்தில் தமிழ்நாடு அரசு புறக்கணித்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி ஆளுநர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உட்பட பல கட்சிகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தேநீர் விருந்தில் அதிமுக, தமாக, பாஜகவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  அதிமுகவைச் சேர்ந்த  விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோர்களும் தமாக தலைவர் ஜி கே வாசன், பாஜகவின் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் குஷ்பு உள்ளிட்டோர் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்