ராஜ்யசபா எம்பி சம்பளத்தை வைகோ என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (19:37 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் திடீரென அவர் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு வெளிவந்தது. இந்த தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது
 
இருப்பினும் இன்று வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வைகோவின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கர்ஜிப்பது உறுதியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கப்போவதால் அவரது கட்சியினர் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று பேட்டியளித்த வைகோ, தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வரவு வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் எந்தப் பதவியையும் தான் எதிர்பார்த்து இருந்தது இல்லை என்றும், தனது கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தை தான் ஒரு கோவிலாக, மசூதியாக, தேவாலயமாக, கருதுவதாகவும், தன்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு கட்சிக்காக உழைப்பேன் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்