வைகோவைக் கடுப்பாக்கியக் கேள்வி – நீதிமன்றத்தில் சலசலப்பு !

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (15:55 IST)
தேசத்துரோக வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு தொடர்பாக பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்வியால் அவர் கோபமடைந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள் எழுந்த சலசலப்புகள் தீர்ந்துள்ளன.

இவை ஒருபுறம் இருக்க தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். அதில் ‘எனக்கு எதிராக நீதிமன்றம் சட்டத்தின் படி வழங்கப்படவில்லை. சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனவே அந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அங்கிருந்து வெளியே வரும்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ஏன் மேல் முறையீடு செய்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினீர்கள் எனக் கேட்டபோது ‘தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று நான் எப்போது கூறினேன்? அதில் எனக்கு ஆயுள் தண்டனையே கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டேன். விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொல்லியுள்ளேன். அத்தனை ஊடகங்களும் என்னை பாராட்டிக்கொண்டிருக்கும் போது நீங்கள் என்னிடம் ஏன் அப்பீல் செய்கிறீர் எனக் கேட்கிறீர்கள். நீதிபதியின் மனதில் விஷமில்லை. உங்களுடைய மனதில் விஷம் நிறைந்திருக்கிறது’ எனக் கோபமாகக் கூறினார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவாகியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்