காலையில் உயர்ந்த தங்கம், மாலையில் திடீர் சரிவு.. சென்னையில் இன்று மாலை நிலவரம்..!

Mahendran

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (18:12 IST)
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலையில், இன்று  சென்னையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் விலை உயர்வை கண்டாலும், மாலையில் விலை கணிசமாக குறைந்து சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,120 சரிவை கண்டுள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்துள்ளது. இன்று மாலையில் ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.91,200 ஆக விற்பனையாகிறது.
 
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய வர்த்தக முடிவில் சவரனுக்கு ரூ.800 குறைவாக தங்கம் விற்கப்படுகிறது.
 
முன்னதாக இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து காணப்பட்டது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால், ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 சரிவு ஏற்பட்டுள்ளது.
 
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.170 ஆக விற்பனையாகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்