வைகோ, சீமான் அரை மாவோயிஸ்டுகள்: எச்.ராஜா

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (16:22 IST)
கடந்த சில நாட்களாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் சீமானும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இருவருமே அரை மாவோயிஸ்டுகள் என்றும் இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று காரைக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த எச்.ராசா, 'தமிழகத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் கெடுக்கும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, அமீர் ஆகியோர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். 
 
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எச்.ராஜா ஒரு முழு மாவோயிஸ்டு என்றும், முதலில் அவரைத்தான் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்