வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்: மும்பைவாசிகளுக்கு எச்சரிக்கை!

சனி, 9 ஜூன் 2018 (16:33 IST)
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
 
மகாராஷ்டிர மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மும்பை, தெற்கு விதர்பா மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. 
 
இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு இன்றும், நாளையும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  
 
தொடர் மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இன்னும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்