ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, மதிமுக கட்சியின் மாநில மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. பெரியார் பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார. அவர் பேசுகையில் நானும் வைகோவும் கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் முகவரி கிடைக்கப் பெற்றவர்கள்.கலைஞர் என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால்தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை என்று வைகோவுக்கு அறிவுரையும் கூறினார்,