விஜயபாஸ்கருக்கு புதிய பதவி கொடுக்க காரணம் என்ன? துரை முருகன் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!!

ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (13:07 IST)
குட்கா ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்ததன் உண்மைப் பின்னணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமியிடம் விஜயபாஸ்கரை ராஜினினாமா செய்யக்கோரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓபிஸ்சும் அதே போல் தான் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே முதல்வரை சந்தித்த விஜயபாஸ்கர் 30 எம்எல்ஏக்களுடன் டி.டி.வி.தினகரனுடம் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன் மிரட்டியதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஊழல் வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டது பலரது விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் அதிமுக மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் விதமாக இந்த நிகழ்வு கருதப்பட்டது.
 
இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் யாரையாவது காட்டிக் கொடுத்துவிடுவார். அதனால் தான் அவருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்