சில மாதங்களாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊடகங்கள் முன்னிலையில் நிருபர்களிடம் கோபப்படுவது, ஆவேசப்படுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது வருகின்றன.
இந்நிலையில் தற்போது மீனவர்கள் பிரச்சனைக்காக ராமேஸ்வரம் சென்ற வைகோ அங்கு நிரூபர்களிடம் கொந்தளித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஊடகங்கள் தொடர்ந்து தனக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
நன்றி: News18
ஊடகங்கள் என்னை எவ்ளோ டேமேஜ் பண்ணாங்கனு எனக்கு தெரியும். ஊடகங்கள் எனக்கு நண்பன் இல்லை. எல்லாரும் வெளிய போங்க என கூறி கடுமையாக நடந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.