இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பேற்றவுடன் வாகை சந்திரசேகரின் முதல் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (17:37 IST)
இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பேற்றவுடன் வாகை சந்திரசேகரின் முதல் அறிவிப்பு!
தமிழ் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் சமீபத்தில் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் வாழ்த்து பெற்று அதன் பின்னர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார் 
 
இந்த நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொறுப்பை ஏற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வாகை சந்திரசேகர் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர்; கடந்த 10 ஆண்டில் அரசின் கணக்கெடுப்பில் 40,000 உள்ளதை திருத்தி மீதமுள்ள அனைவருக்கும் அரசு சலுகைகள் வழங்கப்படும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்