கமல்ஹாசன் ஒரு அரைவேக்காடு: நடிகர் வாகை சந்திரசேகர் தாக்கு

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (07:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் ஓரிரண்டு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று திடீரென தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். எந்த கூட்டணியும் கமல்ஹாசன் கட்சியை சேர்த்து கொள்ள தயாராக இல்லை என்பதால் கமல் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 'நாங்கள் மக்களுக்கு நல்லதை பரிமாற போகும் கை. அவசர கைகுலுக்கலால் இது அழுக்காகி விடக் கூடாது. அதனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து திமுக பிரமுகரும் நடிகருமான வாகை சந்திரசேகர் கூறியபோது, 'காங்கிரசுக்கு தூதுவிட்டு அது முடியாமல் போனதால், கமல் திமுகவை விமர்சிப்பது அவரது அரசியல் கத்துக்குட்டி தனத்தையே காட்டுகிறது என்றும், விளம்பரம் தேடிக் கொள்வதற்காக திமுகவை கமல் விமர்சனம் செய்வது அவரது அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது என்றும், கருணாநிதியிடம் தான் தமிழ் கற்றேன் என கூறும் கமல்ஹாசன், அவரது தலைமையில் தான் திமுக பேரியக்கமாக எதிர்நீச்சல் போட்டு நிலைத்திருக்கிறது என்பதை கமல் மறந்தது எப்படி? என்றும் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா இருந்த போது அவரை பற்றி வாய் திறக்க கமலுக்கு தைரியம் இருந்ததா? என்று கேள்வியெழுய சந்திரசேகர் இனி கமல்ஹாசன் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடாது என்றும் தெரிவித்தார். வாகை சந்திரசேகரின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்