வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும், மாநில கட்சிகளான அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எந்த ஒரு கட்சியும் தனித்து போட்டியிடப்போவதாக இதுவரை அறிவிக்கவில்லை
இந்த நிலையில் கமல் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'தனித்து போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் முடிந்தால் நோட்டாவை விட அதிக வாக்குகளை பெற்று காட்டட்டும்' என்று கூறியுள்ளார். ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு பதில் கூறிய கமல்ஹாசன், 'அனைவரும் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் ஆடுகின்றனர், எங்கள் பலம் என்ன என்பதை தேர்தலுக்கு பின் தெரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.