சென்னையில் ஆண்டுதோறும் மழை பெய்யும் காலங்களில் மழை தண்ணீர் வெளியேற முடியாத சூழலால் மழை வெள்ளம் வீடுகளை மூழ்கடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்காத அளவு மழைநீர் வடிகாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பகுதி வாரியாக பல ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 8 ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை என்றும், தடுப்புவேலிகள் அமைக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த 8 ஒப்பந்ததாரர்களுக்கும் மொத்தமாக ரூ.2.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தடுப்புவேலி அமைக்காத 5 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமாக விதித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.