சென்னையில் கரையை கடக்கும் புயல்: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:00 IST)
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் சென்னையை அடுத்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது நாளை அல்லது நாளை மறுநாள் புயலாக உருவெடுக்கும் என்றும் இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

சென்னை அருகே புயல் கரையை கடந்தால் சென்னைக்கு மிக கனமழை இருக்கும் என்றும் அதனால்  பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில்  டிசம்பர் 4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதை முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மீட்பு படையை தயார் நிலையில் வைத்திருக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்