ரேஷன் கடைகளில் இனி பணத்திற்கு பதில் UPI வசதி! தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:12 IST)
ரேஷன் கடைகளில் விரைவில் யூபிஐ பண பரிமாற்றம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முதல்கட்டமாக பெரிய நகரங்களில் உள்ள ரேசன் கடைகளில் இந்த வசதி செய்யப்படும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்