தமிழிசையின் விக்கிபீடியா பக்கம் படும் பாட்டை கவனித்தீர்களா?

திங்கள், 23 அக்டோபர் 2017 (16:35 IST)
'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விமர்சனம் செய்த தமிழிசையை ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த கலாய்ப்புகளையே தாங்க முடியாமல் தமிழிசை விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் சில சேட்டைக்காரர்கள் தமிழிசை செளந்திரராஜன் விக்கிபீடியா பக்கத்திலேயே கைவைத்துவிட்டனர். தமிழிசையை டுமிழிசை என்றும், இவர் குமரி அனந்தனனின் மகள் என்பதற்கு பதிலாக குமரிமுத்துவின் மகள் என்றும், பிறந்ததில் இருந்தே தலைவாராமல் பரட்டை தலையுடன் இருப்பவர் என்றும் மாற்றி அமைத்துள்ளனர்.
 
ஆனால் இதுகுறித்து தெரியவந்தவுடன் உடனடியாக விக்கிபீடியா நிர்வாகம் அந்த பக்கத்தை திருத்திவிட்டது. இருப்பினும் இதுபோல் குசும்புத்தனம் செய்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க  தலைமை நூலகத்தின் நிர்வாகியும் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்