மெர்சல் விவகாரம் ; தொலைப்பேசியில் திட்டுகிறார்கள் - தமிழிசை புகார்

திங்கள், 23 அக்டோபர் 2017 (09:46 IST)
மெர்சல் விவகாரம் தொடர்பாக தன்னை பலர் தொலைபேசியில் அழைத்து திட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 
 
ஒருபுறம் நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தராஜன் “விஜய் உள்ளிட்ட சில நடிகர்களை நாங்கள் வளைத்துப் போடவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார். அதில் உண்மையில்லை. யாரையும் வளைத்துப் போட்டு அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. 
 
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றிய தவறான வசனம் இடம் பெறுவதால் அதை எதிர்த்தேன். இதனால் எனக்கு தொலைப்பேசியில் மிரட்டல் வருகிறது. நேற்று மாலை 4 மணி வரை தொடர்சியாக என்னை தொலைப்பேசியில் அழைத்து திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. இன்றும் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.
 
தொலைப்பேசி, இணையதளங்களில் மோசமாக விமர்சிப்பது தவறான அணுகுமுறை” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்