இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன், எச்.ராஜா புண்ணியத்தில் வெள்ளி மாலையே மீண்டும் ஹவுஸ்புல் ஆனது. அடுத்ததாக சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சிறப்பு காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளிலும் வசூலை வாரி இறைத்தது. போதாக்குறைக்கு ராகுல்காந்தி உள்பட தேசிய தலைவர்களும் பேச ஆரம்பித்துவிட்டதால் இன்னும் ஒரு வாரத்திற்கு படத்தின் வசூல் பிரம்மாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னையில் மட்டும் இந்த படம் ஒப்பனிங் வசூலாக அதாவது புதன் முதல் ஞாயிறு வரை ரூ.6,83,68,108 வசூல் செய்துள்ளது. சுமார் ரூ.7 கோடியை நெருங்கிவிட்ட இந்த படத்தின் வசூல் அடுத்த வாரத்திற்குள் ரூ.10 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த அபார வசூலுக்கு காரணமான தமிழிசைக்கு விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.