உதயநிதி வாகனத்தை மறித்த த.மா.கா-வினர்: பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (17:13 IST)
திமுக இளைஞர் அணி செயளாளர் உதயநிதியின் வாகனத்தை த.மா.காவினர் மறித்ததால் பரபரப்பு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
 
இந்நிலையில், அரியலூர் - திருமானூரில் ஜி.கே.மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுக பரப்புரை செய்ததாக த.மா.கா-வினர் புகார். கட்சி கொடியுடன் உதயநிதி வாகனத்தை த.மா.கா-வினர் மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும், ஜி.கே.மூப்பனார் பெயரை அழித்ததற்காக உதயநிதி மட்டுமின்றி திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ள நிலையில் திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டது திமுகவினரின் செயல் அல்ல அம்மாவட்ட செயலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்