டாடியே துணை!! ஸ்டாலின் மீது பாரத்தை போட்ட உஷார் உதயநிதி!

சனி, 16 நவம்பர் 2019 (12:43 IST)
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்று தெரியவில்லை என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக தரப்பில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 
 
 அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்ததை போலவே, சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம், இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, தென்சென்னை இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா, சிறுபான்மை பிரிவு சபில் ஆகியோர் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.  
 
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்று தெரியவில்லை. தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.  
 
நடந்து முடிந்த இரு இடைத்தேர்தல்களின் போது உதயநிதி ஸ்டாலின் பெயர் வேட்புமனு தாக்கலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு முறை உதயநிதி வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும் இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்