வெட்ட வெளியிலே பேசுர விஷயமா இது? உதயகுமார் பேட்டி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (14:28 IST)
முதல்வர் வேட்பாளர் பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை என அமைச்சர் உதயகுமார் பேட்டி. 
 
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது என்பதில் பூசல்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. 
 
எம்.எல்.ஏக்க சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என செல்லூரார் சொல்ல, ஒரே முதல்வர் எடப்பாடியார்தான் என ராஜேந்திரபாலாஜி சொல்ல அமைச்சர்கள் ஆளுக்கொரு எண்ணத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியாரை முன்னிறுத்துவது ஓபிஎஸ் அணியினரை அப்செட் ஆக்கியதாகவும் கூறப்பட்டது. 
 
செய்தியாலர்கள் இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று அவசரம் இல்லாமல் பதில் அளித்தார். இது குறித்து தற்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, அதிமுக ஒற்றுமையோடு இருக்கிறது. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. 
 
ஆனால், எதிர்கட்சியினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை, மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்