கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரை சேர்ந்த மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் “தந்தை பெரியார் தமிழகத்தின் அடையாளம்-அவரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையோடு நடத்தியது முத்தமிழறிஞரின் கழக அரசு. ஆனால், பெரியார் சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை இடமாற்றம் செய்கிறது அடிமை அரசு. முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை, மானம் என்றாலே கூச்சம் வந்து விடுகிறது.” என்று கூறியுள்ளார்.