திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், இதனைத்தொடர்ந்து முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது.
இது குறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் அப்போதே எழுந்தது. திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து உதயநிதிக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் உதயநிதி மீது பல விமர்சங்கள் எழுந்தது.
ஆனால், அவர் விமர்சங்களை கண்டு துவண்டுபோகாமல் செயலில் தனது திறனை வெளிப்படுத்த துவங்கினார். அப்போது முதல் இப்போது வரை அரசியல் ரீதியாக உதயநிதி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு செயல்கள் மூலம் பதில் அளித்து வருகிறார்.