அரசியல் தலையீடா? விளக்கம் கொடுத்த ஜெயகுமார்!

வெள்ளி, 3 ஜூலை 2020 (17:52 IST)
சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை தெளிவுபடுத்த முன்வந்த அமைச்சர் ஜெயகுமார். 
 
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரித்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. உடனடி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்தது. 
 
இந்நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ரவி மட்டும் சிபிசிஐடியிடம் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கயத்தாறு அருகே தப்பி சென்று கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.  
 
தற்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பிசெல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உதவிகள் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீதரை சுற்றி வளைத்து பிடித்தபோது அவரது வாகனத்தில் அரசியல் பிரமுகரது ஆட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக குற்றவாளிகளை காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தற்போது இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, சாத்தான்குள்ம் விவகாரத்தில் முழுக்க முழுக்க நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள்தேவையின்றி குற்றம்சாட்டுகின்றன என தெளிவுபடுத்தியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்