அரசியலில் அசுர வளர்ச்சி… உதயநிதி கடந்து வந்த பாதை!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (13:45 IST)
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.


உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம் குறித்த பார்வை…

# திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமனம் (2019)
# சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிப்பு (மார்ச், 2021)
# தேர்தலில் 67.89 சதவீத வாக்குகள் பெற்று 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (மே, 2021)
# சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு (மே, 2021)
# 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக நியமனம் (ஏப்ரல், 2022)
# மீண்டும் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் ( நவம்பர், 2022)
# இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ( டிசம்பர், 2022)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்