கார்கோ விமானத்தில் சண்டைபோடும் ஜெய்…. ’பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் ’வாவ்’ புகைப்படங்கள்

வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:40 IST)
ஜெய் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வருகிறது பிரேக்கிங் நியூஸ் திரைப்படம்.

நடிகர் ஜெய் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த வீரபாண்டிபுரம் மற்றும் குற்றம் குற்றமே ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த இரு படங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஜெய் ’பிரேக்கிங்’ நியூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெய்யுடன் பானுஸ்ரீ, பானு ரெட்டி, பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிக்காக தற்போது பிரம்மாண்டமாக கார்கோ விமான செட் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படகுழுவினர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்