அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்கள்… செம்ம line up!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:30 IST)
கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது நெஞ்சுக்கு நீதி படத்தினை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் மே 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் கார்த்தி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நெல்சன் படத்துக்குப் பிறகு அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்