சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியா? குவியும் விருப்பமனு

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (17:21 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகும் வகையில் விருப்பமனுக்களை பெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று இளைஞர் அணி சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களின் விருப்ப மனுக்களை வழங்கலாம் என சமீபத்தில் திமுக தலைமை அறிவித்தது. அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று விருப்ப மனுக்கள் குவிந்து வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது இளைஞர் அணியின் செயலாளராக இருந்து வரும் நிலையில் இந்த விருப்பமனு அதே இளைஞர் அணி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலினும் கடந்த 1996ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்