இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் முன்னிலையில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்த நிலையில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமின் வழங்கபட்டு உள்ளதை சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி மோசஸஸ் ஜெபசிங், பல்வேறு நிபந்தனைகளுடன் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் செல்லும் போதும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த போதும் செய்தியாளர்களை பார்த்ததும் அடுத்த அடுத்த வழக்குகளில் மீண்டும் மீண்டும் என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.