சவுக்கு சங்கருக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

Mahendran

புதன், 31 ஜூலை 2024 (14:39 IST)
கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி என்றும், இதன் காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றுவதற்காக சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இது சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரிக்க சென்றபோது போலீசார் தடுத்த்தாகவும் பத்திரிகையாளர்களை மருத்துவமனை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
போலீசார் தரப்பில் சவுக்கு சங்கருக்கு வயிற்று வலி என்று கூறப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் தரப்பில் அவருக்கு நெஞ்சுவலி என்று கூறப்படுவதால் அவரது உடல் நிலையின் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை என்று அந்த பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்