பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? ஆன்மீகவாதிகள் கூறிய முக்கிய தகவல்..!

Mahendran

சனி, 13 ஜனவரி 2024 (17:25 IST)
ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதி பொங்கல் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி மிகவும் சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் திருவிழா கொண்டாடும் தினத்தன்று பொங்கல் வைப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த பொங்கல் எப்போது வைக்க வேண்டும் என்று பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் மற்றும் மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். பொங்கல் வைக்க நல்ல நேரம் 15.1.2024, தை 1, திங்கட்கிழமை நல்ல நேரம் காலை 6.00 - 7.30, 9.00 - 10.30, மதியம் 12.40 - 1.40

அதேபோல் 16.1.2024, தை 2, செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, 11 மணி முதல் 12 மணி வரை ஆகும்.

மேலும் பொங்கலை பச்சரிசி சாதத்தில் தான் வைக்க வேண்டும் என்றும் சிலர் பொங்கல் பானை பொங்க வேண்டும் என்பதற்காக பால் சேர்க்கும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர் ஆனால் இது பாரம்பரியமான வழக்கமல்ல. அரிசியை ஒருமுறை கழுவிய தண்ணீரை கீழே ஊற்றி விட்டு அதன் பிறகு இரண்டாவது முறை கழுவும் தண்ணீரை பொங்கல் வைக்க பயன்படுத்த வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்