இன்று மாலை சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்னர் அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடம் சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணிக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஜெயலலிதா நினைவிடம் முன் இணைவார்கள் என்றும் நாளை நடைபெறும் திருவாரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் சற்றுமுன் வெளிவந்த செய்தியின்படி இரு அணிகளின் இணைப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சற்றுமுன் செய்தியாளர்களை ஓபிஎஸ் சந்திப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது
இரு அணிகளின் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டது தினகரன் அணிக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது