சிலைக்கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (20:04 IST)
சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொன்மாணிக்கவேல் கடந்த சில மாதங்களாக சிலை கடத்தல் வழக்கு குறித்து விசாரணை செய்து வருகிறார். அவரது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார் 
 
சிலை கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த உரிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
 
அன்றைய தினம் பொன்மாணிக்கவேல் குற்றம் சாட்டிய இரண்டு அமைச்சர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் அவர் பதில் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரண்டு அமைச்சர்கள் யாராக இருக்கும் என்பதே தற்போது தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. சிலை கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்கள் மீது ஒரு அதிகாரி குற்றம்சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்