2 லட்சம் கன அடி நீர் திறப்பு : ஓகேனக்கல் பகுதியில் வெள்ள அபாயம்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:50 IST)
கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஓகேனக்கல் பகுதியில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

 
கடந்த சில நாட்களாகவே கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பி விட்டது. இதனால், உபரி நீர்கள் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது.
 
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் திறப்பு 1.90 லட்சம் கன அடியில் இருந்து 2 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர பகுதில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரும்பாலானோரின் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்