TVK Maanadu: ரயிலில் இருந்து குதித்த விஜய் ரசிகர்கள் உயிரிழப்பா!? - விக்கிரவாண்டியில் அதிர்ச்சி!

Prasanth Karthick
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (11:15 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்காக ரயிலில் சென்ற விஜய் ரசிகர்கள் கீழே விழுந்து பலியானதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை என ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. மாலை நடைபெற உள்ள மாநாட்டிற்கு காலை முதலே ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் வரத் தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டியே ஸ்தம்பித்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயிலில் தவெக மாநாட்டிற்கு செல்வதற்காக ஏராளமானோர் ஏறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் விக்கிரவாண்டி தவெக மாநாடு நடக்கும் இடத்தை தாண்டி சென்றபோது சிலர் அங்கேயே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றதாக கூறப்படுகிறது.
 

ALSO READ: TVK Maanadu: கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்? - விக்கித்து நிற்கும் விக்கிரவாண்டி!
 

அப்போது தவறி விழுந்ததில் நிதிஷ்குமார் என்ற 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள் அவர் உயிரிழக்கவில்லை என்றும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேரம் ஆக ஆக விக்கிரவாண்டியில் கட்டுப்படுத்த முடியாத அளவு தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்