தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மற்ற அரசியல் கலை கட்சி தலைவர்கள் இந்த மாநாடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் இந்த மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாட்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான இலட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் திரு. விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.