நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம்; தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:11 IST)
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி மின் உற்பத்தி மையத்தின் சில யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாக நிலக்கரி தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன்கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில காலமாக நிலக்கரி வரத்து குறைந்ததால் மின் உற்பத்தி பணிகளில் தேக்கம் நிலவியது. கடந்த 21ம் தேதி விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து 60 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி வந்தடைந்தது.

இதனால் மின் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நிலக்கரி வரத்து குறைந்துள்ளதால் 5 யூனிட்டுகளில் 4 யூனிட் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்