தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கொலையாளி என கூறப்படும் மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி சேர்ந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததாகவும் இதனை அடுத்து அவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதாகவும் நேற்று தகவல் வெளியானது.
இந்த தகவல் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரடியாக சென்று லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தார். இந்த நிலையில் இந்த கொலை குறித்து நான்கு தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கொலையாளி என கூறப்படும் மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.