இந்து முன்னணி சசிகுமார் கொலையில் திருப்பம் - காட்டிக்கொடுத்தது கண்காணிப்பு கேமரா

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (16:51 IST)
கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் நெல்லை கும்பலுக்கு தொடர்பிருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

 
கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.
 
அதில் கொலைக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற சசிகுமாரை ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் சிலர் பின்தொடர்ந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
 
இந்த கும்பலில் உள்ள 4 பேரில் ஒருவரின் அடையாளம் தெளிவாக பதிவாகியுள்ளது. அவரது படத்தை வைத்து காவலர்கள் விசாரித்ததில் அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
 
மேலும் அவர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் போலியாக உள்ளதால் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்