தினகரன் கைது உறுதி: தேசிய ஊடகங்கள் ஆருடம்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:22 IST)
இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு பெற்று தர லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைதாவது உறுதி என தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.


 
 
டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுகேஷ் சந்திர என்பவர் டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இரட்டை இலையை பெற்றுத்தருவதாக கூறி டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு 1.30 கோடி ரூபாய் முன் பணமாக பெற்ற சுகேஷ் சந்திராவிடமிருந்து கைது செய்தபோது 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்துன் டிடிவி தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த புகாரை டிடிவி தினகரன் முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனால் சுகாஷ் சந்திராவும் தினகரனும் பேசியதற்கான ஆதாரங்கள் டெல்லி போலீஸ் வசம் உள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் டிடிவி தினகரனை விரைவில் டெல்லி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தும் எனவும் தேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்