12ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு!

திங்கள், 8 மே 2023 (12:02 IST)
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து 5.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
 
12ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என்றும் இது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக துணை தேர்வு எழுத விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்